FIFA suspends All India Football Federation due to ‘third party influence’ – News18 Tamil

Share

மூன்றாம் தரப்பினர் தலையீடும் செல்வாக்கும் நிர்வாகத்தில் அதிகம் இருப்பதாகக் குற்றம் சாட்டி உலகக் கால்பந்துக் கூட்டமைப்பு (FIFA) இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் வரும் அக்டோபரில் யு-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

உலகக் கால்பந்து கூட்டமைப்பின் விதிமுறைகளையும் சட்டங்களையும் இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு மீறியதாக ஃபீபா கடும் குற்றச்சாட்டை எழுப்பி இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு தன் முழு நிர்வாகக் கட்டுப்பாட்டையும் மீட்டெடுக்கும் வரை இந்த இடைக்கால தடை நீடிக்கும். அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேல் தன் பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடித்ததால் எழுந்த சர்ச்சையில் கோர்ட் அது செல்லாது என்று முடிவெடுத்து இடைக்கால நிர்வாகக் குழுவை நியமித்தது.

எப்படி 2013 சூதாட்ட விவகாரம் உள்ளிட்ட விவகாரத்துக்குப் பிறகு பிசிசிஐ கலைக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழு பிசிசிஐ-யை நடத்தியதோ அதே போல் இப்போது இந்தியக் கால்பந்து கூட்டமைப்பை நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழு நடத்தி வருகிறது.

இந்த நிர்வாகக் குழு அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் சட்டவடிவத்தை மாற்றியமைத்ததோடு தேர்தல்களையும் நடத்தியது.

நிர்வாகக் குழு என்பது மூன்றாம் தரப்பு நிர்வாகமே, எனவே என்றைக்கு நிர்வாகக் குழு அமைப்பு கலைக்கப்பட்டு அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கட்டுப்பாட்டுக்கு இந்திய கால்பந்து சம்மேளனத்தின் கீழ் அனைத்து தினசரி நிர்வாகக் கட்டுப்பாடுகளும் வருகிறதோ அன்று தடை நீங்கும் என்று ஃபீபா தெரிவித்துள்ளது.

உலகக் கால்பந்து கூட்டமைப்பு இப்படி ஒருநாட்டின் கால்பந்துக் கூட்டமைப்பை தடை செய்வது முதல் முறையல்ல. நாட்டின் கால்பந்து கூட்டமைப்பு தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும், அரசியல் செல்வாக்கோ, வெளி அமைப்புகளின் செல்வாக்கோ நிர்வாகத்தலையீட்டில் இருந்தால் ஃபிபா உடனே அந்த கால்பந்து சம்மேளனத்திற்கு தடை விதிக்கும், இது நிறைய முறை நடந்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com