Feeling Bloated After Breakfast Do This | காலை உணவு சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமாக தோன்றுகிறதா?

Share

தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் 3 வேளை உணவுகளில் நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு வருவது காலை உணவு ஆகும். அதனால், எதை தவிர்த்தாலும் காலை உணவை தவிர்க்கவே கூடாது என்பார்கள். காலையில் நல்ல பசி எடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். அது முறையாக செரிமானம் ஆகி, அடுத்த வேளையும் பசி எடுக்க வேண்டும்.

எல்லோருக்கும் இப்படி இயல்பாக இருந்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சிலருக்கு சாப்பிடவுடன் வயிறு உப்புசம் ஏற்பட்டு விடும். அதாவது வயிறு ஒரு விதமான மந்த நிலைக்கு சென்று விடும்.

காலை உணவை சாப்பிட்ட பிறகு தான் நமக்கு அன்றைய பொழுதே தொடங்குகிறது. வேலைக்குச் செல்வது அல்லது தனிப்பட்ட காரியங்களை செய்வதானாலும் இதற்குப் பிறகுதான். ஆனால், இந்த சமயத்தில் வயிறு உப்புசம் ஏற்பட்டு விட்டால் பெரும் தொந்தரவாகத் தானே அமையும்.

வயிறு உப்புசம் ஏற்பட்டவுடன் நாம் அணியும் பேண்ட் இறுக்கமாகத் தோன்றும். வயிறு முன்பு இருந்ததைக் காட்டிலும் இரட்டிப்பு அளவில் காணப்படும். வயிற்று பிடிப்பு, வாயுத்தொல்லை, இரைச்சல் போன்ற தொந்தரவுகளை நீங்கள் உணரக் கூடும். இவை எல்லாமே வயிறு உப்புசத்தின் அறிகுறிகள் தான்.

வயிறு உப்புசத்தை தவிர்க்க என்ன செய்யலாம்

நம் உடலில் இருந்து கழிவுகளை மிக எளிமையாக வெளியேற்றுவதற்கு 200 மில்லி வெந்நீர் அருந்தலாம். இது உணவுக் குழாய் மற்றும் உணவுப் பைகளில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்யும். மேலும் உங்களுக்கு மலச்சிக்கல் அல்லது வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் இருந்தால் வெந்நீருடன் ஒரு டீ ஸ்பூன் தூய்மையான வெண்ணெய் சேர்த்து அருந்தலாம்.

வெந்நீரில் அரை எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்தால் செரிமானம் மிக எளிமையாக நடைபெறுவதுடன், உடல் எடையைக் குறைக்க உதவும். ஒருவேளை வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படுமானால் எலுமிச்சையை தவிர்க்கவும்.

பழங்களை சாப்பிடலாம்

ஒரு பவுல் நிறைய பழங்களை தினசரி ஒருமுறை அல்லது இரண்டு முறை சாப்பிடலாம். குறிப்பாக ஆப்பிள் பழத்தை நிறைய எடுத்துக் கொண்டால் மலச்சிக்கலை தவிர்க்கலாம். பழங்களை சாப்பிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வேறெதுவும் சாப்பிடக் கூடாது.

காலை உணவுக்குப் பிறகு சாப்பிடக் கூடாதவை

காலை உணவாக நீங்கள் இட்லி, தோசை, ஓட்மீல்ஸ், சூடான சாதம் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், காலை உணவாக பழங்களை உட்கொள்ளக் கூடாது. காலையில் நீங்கள் சாப்பிடும் உணவுகள் சூடாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே ஊற வைக்கப்பட்ட நட்ஸ்களை எடுத்துக் கொண்டால் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com