England vs South Africa 1st test Lords – South Africa leads by 161 runs in first innings against England, லார்ட்ஸ் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 326 ரன்களுக்கு ஆல் அவுட்

Share

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நேற்றைய ஸ்கோர் 289/7 என்று இன்று தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் முந்தைய நாள் நாட் அவுட் வீரர் ரபாடா அதே 3 ரன்களில் வெளியேறினார், பாட்ஸ் வீசிய பந்தை வைடு மிட் ஆனில் புல் ஷாட் ஆடினார் ரபாடா, பந்து பிராடைத் தாண்டிச் செல்லும் என்றுதான் தெரிந்தது, ஆனால் பிராட் அட்டகாசமாக பிடித்தார், அட்டகாசமான கேட்ச், ரபாடா வெளியேறினார்.

41 ரன்களில் இருந்த மார்க்கோ யான்சென் 48 ரன்கள் எடுத்து தன் முதல் அரைசதத்துக்காக ஆசைப்பட்டு வைட் பந்தை விரட்டி எட்ஜ் செய்து வெளியேறினார். பிராட் விக்கெட்.

ஆனால் அன்று பந்து வீச்சில் இங்கிலாந்து மிடில் ஆர்டரை காலி செய்த ஆன்ரிச் நார்ட்யே பேட்டிங்கில் பின்னி எடுத்து விட்டார் 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ லுங்கி இங்கிடி கடைசி விக்கெட்டாக பிராடிடம் டக் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா 89.1 ஓவர்களில் 326 ஆல் அவுட், ரன் ரேட் ஆரோக்கியமான 3.69. ஆகும்.

இங்கிலாந்து தரப்பில் பிராட், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, பாட்ஸ் 2 விக்கெட்டுகளையும் வெட்டரன் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜாக் லீக் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

161 ரன்கள் முன்னிலை பெற்று தென் ஆப்பிரிக்கா வலுவாக 2வது இன்னிங்ஸ் பவுலிங்கைத் தொடங்கியுள்ளது, இங்கிலாந்து சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி தங்கள் 2வது இன்னிங்சில் 16 ரன்கள் எடுத்துள்ளனர்.

இங்கிலாந்தின் முதல் இலக்கு 161 ரன்கள் குறைப்பாட்டை நீக்குவது அதற்குள் அதிக விக்கெட்டுகளை இழக்காமல் அதன்பிறகு பாஸ்பால் என்று மெக்கல்லம் பாணி ஆக்ரோஷத்தைக் காட்டி ஆடலாம். 350 ரன்களுக்கும் மேல் இங்கிலாந்து எடுத்தால்தான் தென் ஆப்பிரிக்காவை ஏதாவது செய்ய முடியும், ஆனால் முதல் இன்னிங்ஸில் 165க்கு ஆல் அவுட், இந்த இன்னிங்சில் 161 ரன்கள் பின்னிலை. பார்ப்போம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com