அடுத்ததாக வெள்ளிக்கிழமை (ஜூன் 20) 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கத் தயாராக இருக்கிறார்.
இந்த நிலையில், இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காமலிருந்த சமயத்தில் ஒரு முன்னணி வீரர் தன்னை ஓய்வுபெறச் சொன்னதாக கருண் நாயர் கூறியிருக்கிறார்.

டெய்லி மெயில் ஊடகத்திடம் இதனைப் பகிர்ந்த கருண் நாயர், “இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர் எனக்கு போன் செய்து “நீங்கள் ஓய்வு பெறுங்கள்’ என்று என்னிடம் கூறியது இன்றும் எனக்கு நியாபகம் இருக்கிறது.
ஏனெனில், லீக் போட்டிகளில் வரும் பணம் என்னைப் பாதுகாப்பாக வைக்கும் என்பதால் அப்படிச் சொன்னார்.
அவ்வாறு செய்வது எளிதாக இருந்திருக்கும். ஆனால், பணம் எதுவாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுப்பதென்பது என்னை நானே தள்ளிவிடுகிறேன் என்று எனக்குத் தெரியும்.
இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதை ஒருபோதும் நான் கைவிடப்போவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தோம், இப்போது எங்கிருக்கிறோம் என்று பாருங்கள்.” என்று கூறினார்.