மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடி காட்டி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 74 ரன்களில் அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல். ராகுல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
“அது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு. மதிய உணவு இடைவேளைக்கு முன் நான் சதம் அடிக்க வேண்டும் என்று பண்ட்டிடம் கூறினேன். பஷீர் கடைசி ஓவரை வீசியதால், எனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பந்தை நேராக ஃபீல்டரிடம் அடித்துவிட்டேன். அது நான் பவுண்டரிக்கு அடித்திருக்க வேண்டிய பந்து.
பிறகு, நான் ஸ்ட்ரைக்குக்கு வரவேண்டும் என்று பண்ட் நினைத்தார். நடந்ததோ வேறு, அந்த ரன் அவுட் போட்டியின் வேகத்தையே மாற்றிவிட்டது. அது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம்” என்று தெரிவித்திருக்கிறார்.