ENG vs IND: `பவர்ப்ளே தாக்குதல்’ – டி20 உலகக்கோப்பைக்கான இந்தியாவின் புதிய யுக்தி இதுதானா? | India captures the T20 series against England with their new approach called the Powerplay attack

Share

பவர்ப்ளேவை முழுவதுமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற இந்த புதிய அணுகுமுறை இந்திய அணியின் பந்துவீச்சிலும் பிரதிபலித்தது. கடந்த ஆட்டத்தை போலவே இம்முறையும் முதல் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே இங்கிலாந்து பேட்டர்களை மொத்தமாக அடி பணிய வைத்தனர் இந்திய பௌலர்கள். புவனேஸ்வர் குமார் தன் ஸ்விங் மாயாஜாலத்தைத் தொடர, அவரோடு சேர்ந்து பும்ரா, பாண்டியா கைகோக்க, இவர்களின் அட்டாக்கிற்கு இங்கிலாந்து பேட்டர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. அங்கே துவங்கிய ஆக்ரோஷத்தை மிடில் ஓவர்களிலும் தொடர்ந்து, கடந்த ஆட்டம் போலவே இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கி வென்று தொடரையும் கைப்பற்றியது இந்தியா.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்கன் “இந்,திய அணியினரின் ரிஸ்க் எடுக்கும் அப்ரோச் மிகவும் மாறியுள்ளது. அது பலவகையில் அவர்களுக்குக் கைகொடுக்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.

“இந்தியா இவ்வாறு தொடர்ந்து விளையாடினால் சில நேரங்களில் அவர்கள் சறுக்கல்களைச் சந்திக்க கூடும். ஆனால் இந்தப் பாதை தரமான கிரிக்கெட்டிற்கு வழிவகுக்கும்” என்கிறார் ஹர்ஷா போக்லே.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com