Eng vs Ind: `எங்களுக்கு இடையே ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்தவில்லை’ – வைரலாகும் வாசிம் ஜாஃபரின் பதிவு

Share

இருவரும் அவ்வப்போது எக்ஸ் தளத்தில் வார்த்தை போரில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல இந்தத் தொடர் நடைபெற்றபோதும் இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இருவருக்கும் நடைபெற்ற வார்த்தை போர் தொடர்பாக வாசிம் ஜாஃபர் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

வாசிம் ஜாஃபர்- மைக்கேல் வாஹன்

வாசிம் ஜாஃபர்- மைக்கேல் வாஹன்

வாசிம் ஜாஃபர் வெளியிட்டிருந்தப் பதிவில், “எனக்கும் மைக்கேல் வாஹனுக்கும் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய செய்திகள் அடிப்படையற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை.

எங்களின் சோசியல் மீடியா போர் தொடரும். எங்கள் உரையாடலுக்கு முடிவே இருக்காது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி.” என்று ஜாஃபர் ட்வீட் செய்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

சமீப காலங்களாக போர் நிறுத்தம் பற்றி டிரம்ப் பேசி வரும் நிலையில் அதனை மையப்படுத்தி வாசிம் ஜாஃபர் இவ்வாறு ட்வீட் செய்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com