Eng v Ind: 'கையில் காயம்; கம்பீருடன் போட்ட திட்டம்' – சதத்தைப் பற்றி ஜெய்ஸ்வால்

Share

‘ஜெய்ஸ்வால் சதம்…’

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்திருந்தார். அவரின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நல்ல நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், நேற்றைய நாளுக்குப் பிறகு ஜெய்ஸ்வால் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.

Yashaswi Jaiswal
Yashaswi Jaiswal

‘பத்திரிகையாளர் சந்திப்பு!’

அவர் பேசியதாவது, “களத்தில் நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் எடுக்கும் ஒவ்வொரு சதத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தே செய்கிறேன்.

ஆனாலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் அடித்திருக்கும் சதங்கள் கொஞ்சம் ஸ்பெசலானவைதான். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு அணியை இன்னும் மேம்படச் செய்ய வேண்டும்.

அணியிலுள்ள சூழலும் சிறப்பாக இருக்கிறது. இந்த அணியில் இடம்பிடித்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த சீரிஸூக்கு முன்பாக நிறையப் பயிற்சிகளை மேற்கொண்டோம். நானும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் நிறையப் பேசினோம்.

எனது டெக்னிக் சார்ந்து நிறையத் திட்டங்களைத் தீட்டினோம். பெரிய இன்னிங்ஸ்களை ஆட வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணமாக இருந்தது.

Jaiswal
Jaiswal

கில்லும் நானும் ஆட்டத்தை ஒவ்வொரு செஷனாக எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்தோம். ஷாட் ஆட ஏதுவான பந்துகளைத் தேர்ந்தெடுத்து ஆட வேண்டும் என்று நினைத்தோம்.

கில் ரொம்பவே நிதானமாகப் பக்குவமாக ஆடினார். அவருடைய தலைமையின் கீழ் ஆடுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தின்போது என்னுடைய இரண்டு கைகளிலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தது” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com