முட்டை வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு… அத்தகைய முட்டை வீட்டில் இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே இல்லை. அதை வைத்து குழம்பு, பொரியல் என விருந்தே வைத்துவிடலாம். அதில் இன்று டேஸ்டியான முட்டை தொக்கு செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…
தேவையானவை:
வேக வைத்த முட்டை – 3
சின்ன வெங்காயம் – 15
காய்ந்த மிளகாய் – 10
தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – அரை ஸ்பூன்
மல்லி இலை – சிறிதளவு

முட்டை தொக்கு
செய்முறை:
1. வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
2. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை நன்கு சுருள வதக்கவும்.
3. வேகவைத்த முட்டையை மேலும், கீழும் கீறிவிட்டு, வதக்கிய மசாலாவில் போட்டு நன்கு கிளர வேண்டும்.
4. முட்டையில் மசாலா நன்கு சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
5. இது கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு. இவை சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.