அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தன்னை கூறிவரும் நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஓபிஎஸ் கருத்தை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் கருத்து மோதல் வெடித்துள்ளது. ஒருதரப்பினர் ஒபிஎஸ் கருத்துக்கு ஆதரவும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் மாநில செயலாளர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்ற நுழைவுவாயிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், அதிமுக சரிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதால் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சரியான முடிவை எடுக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கி சசிகலா அல்லது ஓபிஎஸ் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
புகழேந்தி
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிய போது நல்லவராக இருந்த சசிகலா இப்போது கெட்டவராக தெரிகிறார் எனக்கூறிய புகழேந்தி, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு எதிராக முனுசாமி போன்றவர்கள கருத்து கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.
இதையும் படிங்க: சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே முரண்பாடு ஏன்? – செல்லூர் ராஜூ விளக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருது சகோதரர்களுக்கு சிலை எழுப்பப்படும் என அறிவித்துள்ளதையும் முதல்வரின் செயல்பாடுகளையும் மனதார பாராட்டுவதாக கூறிய புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அறிவித்தபடி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயர் வைக்காததால் தென்மாவட்ட மக்கள் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளதாகவும்,
திமுக அரசு மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை வைக்க வேண்டும் எனவும் புகழேந்தி கேட்டுக் கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.