Easy way to make instant butter using home made ghee

Share

வெண்ணெய் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். இதை தனியாகவோ அல்லது மற்ற உணவுப் பொருட்களுடன் கலந்து உண்பதற்கு அனைவரும் விரும்புவர். ஆனால் வெளியே நாம் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் வாங்கும் வெண்ணெய் உண்மையிலேயே சுகாதாரமானதா என்றால் கண்டிப்பாக இல்லை. அதனுடன் பல வேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தி வைக்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. எனவே சில நேரங்களில் நமக்கு வேண்டிய போது நம்மிடம் வீட்டில் இருக்கும் நெய்யை வைத்து எப்படி உடனடியாக வெண்ணெய் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வீட்டிலே தயாரிக்கப்பட்ட நெய்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 3/4 ஸ்பூன்

வெந்நீர் – 3 கப்

சோடா உப்பு – 3/4 ஸ்பூன்

ஐஸ் கட்டிகள் – 10

செய்முறை:

ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு இரண்டிலிருந்து மூன்று கப்புகள் சுடு தண்ணீரை அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கப் நெய்யை ஒரு தனி கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, அந்த கிண்ணத்தை அந்த சுடு தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நடுவில் வைக்க வேண்டும். நெய்யானது கட்டியாக மாறாமல் நீர்த்த நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அதே நேரத்தில் இதனை அடுப்பில் வைத்து சூடேற்றவும் கூடாது. இவ்வாறு சுடு தண்ணீரில் வைக்கப்பட்ட நெய்யானது முழுவதுமாக உருகுவதற்கு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை ஆகலாம்.

நெய் முழுவதுமாக உருகிய பிறகு அதனை வேறு ஒரு சுத்தமான கிண்ணத்தில் மாற்றவும். அதன் பிறகு சிறிதளவு தேவையான உப்பையும், சிறிதளவு மஞ்சள் தூளையும் எடுத்து இந்த நெய்யுடன் சேர்க்கவும். அதன் பிறகு நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள சோடா உப்பையும் இதனுடன் சேர்க்கவும். அனைத்தையும் சேர்த்த பிறகு இதனை நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் ஆறிலிருந்து ஏழு ஐஸ் கட்டிகளை சேர்க்க வேண்டும். அவ்வாறு கலக்கும் போது நாம் சேர்த்த ஐஸ் கட்டிகள் நெய்யுடன் சேர்ந்து அதனை கட்டியாக மாற்றும். இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட கடைகளில் விற்கப்படும் வெண்ணெய் போலவே காட்சியளிக்கும்.

Also Read : எஞ்சிய காஃபி தூளை வீணாக குப்பையில் போடுறீங்களா..? இப்படி யூஸ் பண்ணுங்க…

அந்த நெய் கெட்டியாக மாறியவுடன் அதனை பிழிந்து வேறொரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். அப்போது நீர் மற்றும் ஐஸ் கட்டிகள் தனியாகவும் வெண்ணெய் தனியாகவும் இருக்கும். இப்போது வழக்கமாக சமையலுக்கு பயன்படும் “Beater” எனப்படும் அடிக்கும் கருவியை பயன்படுத்தி அந்த வெண்ணெயை நன்றாக அடிக்க வேண்டும் இது இப்பொழுது மிகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறி இருக்கும். மேலும் அவ்வாறு அடித்த பின்பு அதனுடைய நிறம் சற்று வெளிறிக் காணப்படும்.

தற்போது இந்த வெண்ணெய்யை வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஒரு மணி நேரம் அளவிற்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்துப் பார்க்கும் பொழுது இது அச்சு அசலாக கடைகளில் விற்கப்படும் வெண்ணெய் போலவே இருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும் சுவையும் அதேபோலவே இருக்கும். இப்பொழுது வீட்டிலே செய்த சுவையான வெண்ணெய் தயார். இதனை தனியாகவோ அல்லது பிரட், பன், மற்றும் பல உணவு பொருட்களுடன் கலந்தோ நாம் உண்ணலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com