Doubt of common man: மன அழுத்தம் என்றால் என்ன? அதன்‌ அறிகுறிகள் என்ன? அதை தீர்க்க முடியுமா?|About depression, its symptoms and how to solved this problem

Share

படிப்பில் ஆர்வம் குறையும், அடம்பிடிப்பது அதிகமாகும். பொருட்களைத் தூக்கி போட்டு உடைப்பார்கள். எதிர்த்துப் பேசத் தொடங்குவார்கள். பெண் குழந்தைகளுக்கு வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மன அளவில் அதிகம் குழப்பங்கள் ஏற்படும்.

போதைப் பழக்கத்தினாலும் மன அழுத்தம் வரும். திருமண உறவில் இருப்பவர்கள் சண்டை போட்டு பிரிய நேரும் போது மன அழுத்தம் வரும். வயதானவர்கள் தனிமையாக இருக்கும் போது மன அழுத்தம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அல்லது படிப்பவர்கள், அங்கு இருக்கும் மக்கள், சூழல், கலாசாரம் இவற்றை ஏற்றுக்கொள்ளாதபோது அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். மேலும், ஊக்கமருந்து, நீரிழவு (சர்க்கரை நோய்) போன்ற நோய்களுக்காக எடுக்கும் மருந்துகள் மூலம் மன வருத்தம் ஏற்படலாம்.

மது அருந்துபவர்களுக்கும், மன அழுத்தத்துக்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளது. குடிப்பவர்கள் எப்பொழுதும் மனசு கஷ்டமா இருக்கு அதுக்காக குடிக்குரேன்னு சொல்லுவாங்க, ஆனா குடிச்சா அவங்க மன வருத்தம் சரி ஆகாது, மாறாக அதிகரிக்கும்.

எப்படி என்றால் ஒருவன் குடும்ப பிரச்சனையால் மன அழுத்தத்துக்குச் சென்று குடிக்கத் தொடங்கினால், அவனது பிரச்னை சரியாகுமா என்றால் ஆகாது. மாறாக, அவன் குடியால் தனது வேலைகளைச் செய்யாமல் இன்னும் பிரச்னை அதிகரிக்கும் அதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். அதனால் குடியும் அதிகரிக்கும். எனவே, மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதற்கான தீர்வைதான் தேட வேண்டுமே தவிர, மற்றொரு பிரச்னையை அல்ல.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com