doctor viktan – Low BP-யால் தினமும் தலைச்சுற்றல்…  இனிப்பு சாப்பிடுவது உதவுமா? | doctor viktan – Is it advisable to take sweets to manage low BP

Share

குறை ரத்த அழுத்தத்துக்கும் ஸ்வீட் சாப்பிடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, அதன் விளைவாகத் தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, தலைச்சுற்றல் வருவோருக்கு இப்படி உடனே ஸ்வீட் கொடுப்பது நம்மூரில் பலரும் செய்யும் தவறு. இப்படி ஸ்வீட் சாப்பிடுவதால் லோ பிளட் பிரஷர் பாதிப்பை சரிசெய்ய முடியாது.

உடலில் நீர்ச்சத்து வறண்டு, அதன் விளைவாக ரத்த அழுத்தம் குறையும்போதுதான் இளநீர் குடிப்பது, ஓஆர்எஸ் கலந்த தண்ணீர் குடிப்பது போன்றவற்றைச் செய்யச் சொல்வார்கள். மற்றபடி இனிப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி, உங்கள் தலைச்சுற்றலுக்கான காரணத்தைத் தெரிந்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com