Doctor Vikatan: 90 வயது அம்மாவுக்கு பாதங்களில் தோல் உரியும் பிரச்னை… தீர்வு என்ன? | 90-year-old mother has skin problems – what is the solution?

Share

இந்தப் பிரச்னையை சமாளிக்க, வெளிப்புறப் பூச்சாக மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டியது மிக முக்கியம். ஏதோ ஒரு மாய்ஸ்ச்சரைசரை தடவக்கூடாது. அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். அதாவது நீங்கள் உபயோகிக்கும் மாய்ஸ்ச்சரைசரின் ஈரப்பதம் வெளியேறிவிடாதபடி தடுக்கும்படியான ‘ஹியூமக்டன்ட்’ (humectant), யூரியா கலந்த மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டியிருக்கும். இது சருமம் தண்ணீரை உட்கிரகிக்கும் தன்மையையும் அதிகரிக்கும். உட்கிரகித்த தண்ணீர் வெளியேறிவிடாதபடியும் பாதுகாக்கும்.

Skin Care

Skin Care
Photo by Sora Shimazaki from Pexels

எனவே இந்த வயதில் உங்கள் அம்மாவுக்கு நீங்கள் சரியான மாய்ஸ்ச்சரைசரை தேர்ந்தெடுத்து உபயோகிக்கப் பழக்குங்கள். அப்படிப் பண்ணாவிட்டால் என்னவாகிவிடும் என அலட்சியமாக இருக்க வேண்டாம். சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டுபோகும்போது அரிப்பு ஏற்படும். அதைச் சொறியும்போது காயமாகும். அது இன்ஃபெக்ஷனாகும். அது ஒரு சங்கிலித்தொடர் போல அடுக்கடுக்கான பாதிப்புகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். எனவே இவை அனைத்தையும் தடுக்கும் முறையாக மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதுதான் சிறந்த தீர்வு.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com