Doctor Vikatan: 5 வயதுப் பெண் குழந்தைக்கு உடல் முழுவதும் முடி வளர்ச்சி… சிகிச்சை அவசியமா? | Does 5 year girl need treatment for her superfluous hair

Share

நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முடியானது ஒவ்வொருவிதமாகக் காணப்படும். அதாவது, உடலில் காணப்படும் முடியானது மெல்லிதாக, லைட் நிறத்தில் இருக்கும். அதை `வெல்லஸ் ஹேர்’ (Vellus hair) என்கிறோம். அதுவே தலையில் உள்ள முடியாது அடர்த்தியாக கறுப்பாக இருக்கும். அது ‘டெர்மினல் ஹேர்’ (Terminal hair) எனப்படும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை மஞ்சள் தேய்த்துக் குளிப்பாட்டுவது, ஹேர் ரிமூவிங் க்ரீம் உபயோகிப்பது போன்றவை எல்லாம் மிகவும் தவறான விஷயங்கள். பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்து, அதற்கு சிகிச்சை கொடுப்பதுதான் முறையான அணுகுமுறை. மற்றபடி இது சாதாரண முடி வளர்ச்சிதான், உங்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறது என்றால், அதை அகற்ற நினைக்கவோ, அதுபற்றி கவலைப்படவோ தேவையில்லை.

Skin Care

Skin Care
Photo by Sora Shimazaki from Pexels

முடி நீக்கும் சிகிச்சைகள் பெரும்பாலும் லேசர் முறையில் செய்யப்படும். அவை 18 வயதுக்குப் பிறகுகே செய்யப்படும். புறத்தோற்றம் சார்ந்த விஷயமாக இதைப் பார்த்தீர்கள் என்றால் குழந்தையின் 18 வயது வரை காத்திருந்து பிறகு, அதை நீக்கும் சிகிச்சையை மேற்கொள்வதே சரியானது. அதற்கு முன் மருத்துவரை அணுகி, குழந்தையின் முடி வளர்ச்சிக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com