Doctor Vikatan – 01 February 2019 – பிசியோதெரபி – ஏன் எதற்கு எப்படி? | different types of physiotherapy treatments – Doctor Vikatan

Share

ன்றைக்கு மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது `இயன்முறை மருத்துவம்’ எனப்படும் பிசியோதெரபி (Physiotherapy). `பாட்டிக்கு முதுகுவலி. ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லை’ போன்ற வசனங்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்’ முளைத்துவிட்டன. சரி, அது என்ன பிசியோதெரபி? எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவும். 

பிசியோதெரபி பிரிவுகள்

* எலும்பு மற்றும் மூட்டு (Orthopedic)

* நரம்பியல் (Neurology)

* இதயம் மற்றும் சுவாசம் (Cardio & Respiratory)

* குழந்தைகள்நலம் (Pediatrics)

* விளையாட்டு (Sports)

* மகப்பேறியல் (Obstetrics and Gynaecology)

* கை (Hand Conditions)

* சமுதாயம் (Community)

* முதியோர்நலம் (Geriatric)

* உடல் இயக்கவியல் (Biomechanics)

* மறுவாழ்வு (Rehabilitation)

எலும்பு மற்றும் மூட்டு பிசியோதெரபி (Orthopedic Physiotherapy)

இந்தப் பிரிவின் கீழ் வரும் பிரச்னைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

* எலும்பு முறிவு

* எலும்புத் தேய்மானம்

* தசை மற்றும் தசைநார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com