Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் ஆபத்திலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? | Doctor vikatan – How can women protect themselves from the risk of heart attack?

Share

ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்த போதுமான அளவு ஓய்வு அவசியம். பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்யலாம். நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் அதை அளவுக்கதிகமாகச் செய்யாதீர்கள். வாரத்துக்கு 150 நிமிடங்கள் என மிதமான பயிற்சிகளைச் செய்யுங்கள். அது நடைப்பயிற்சியோ, நடனமோ எதுவாகவும் இருக்கலாம்.

மாரடைப்பு

மாரடைப்பு

நெஞ்சில் வலி, அது கைகளில் பரவுவது என ஹார்ட் அட்டாக்கின் பொதுவான அறிகுறிகள் மட்டுமே பலருக்கும் தெரியும். பெண்களைப் பொறுத்தவரை அதீத களைப்பாக உணர்வது, மூச்சு வாங்குவது, வாந்தி வருஷவது போல உணர்வது, ஏதோ அசௌகர்யத்தை உணர்வது, வியர்வை, நெஞ்செரிச்சல், வேறு ஏதேனும் வித்தியாசமான புதிய அறிகுறி என எதுவானாலும் ஐந்து நிமிடங்களில் சரியாகவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள். வருடம் ஒருமுறை இதயநலனை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com