Doctor Vikatan: ஸ்ட்ரெஸ் அதிகமானால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதேன்? | Doctor Vikatan: Does stress cause heart attack?

Share

இது போக மூளைக்கு ஒன்று, இதயத்துக்கு ஒன்று, குடலுக்கு ஒன்று என தனித்தனியாக நரம்பியல் இயக்கம் இருக்கும். அதனால்தான் ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது பேதியாகிறது. ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது வயிற்றில் அல்சர் வருகிறது. பயப்படும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல உணர்வதும் இதனால்தான். ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது ஹார்ட் அட்டாக் வருவதற்கும் இதுதான் காரணம். எனவே இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைப்பில் உள்ளவை.

அந்த வகையில் ஸ்ட்ரெஸ் என்பது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக்கூடியது. அதன் தீவிரத்தை பலரும் உணர்வதே இல்லை. உடல்ரீதியாக ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உணர்வுரீதியாகவும் ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம். அதை ‘ஸ்ட்ரெஸ்ஃபிட்’ என்கிறோம்.

மாரடைப்பு

மாரடைப்பு

அப்படி இருந்தால்தான் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ முடியும். நெகட்டிவ் சிந்தனைகளைத் தவிர்ப்பது, பாசிட்டிவ்வான அணுகுமுறை, எதிலும் கெட்டது தவிர்த்து நல்லதைப் பார்ப்பது, நன்றியோடு இருப்பது போன்ற குணங்கள் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்க வைக்கும். ஆரோக்கியத்தையும் காக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com