சன் ஸ்கிரீன் போட்டுவிடுவதால் குழந்தைக்குப் பாதுகாப்பு என நினைப்பதைவிட, அந்த வெயிலைத் தவிர்க்கச் செய்வதே சிறந்தது. குழந்தைகளுக்கென பிரத்யேக சன் ஸ்கிரீன் எல்லாம் கிடையாது. குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என எல்லோருக்கும் ஒன்றுதான். நல்ல சன் ஸ்கிரீன் என்றால் அதில் 30 முதல் 50 வரை எஸ்.பி.எஃப் (சன் புரொட்டெக்ஷன் ஃபேக்டர்) இருக்க வேண்டும். யுவிஏ மற்றும் யுவிபி கதிர்கள் தாக்காமல் பாதுகாக்கும்படியாக இருக்க வேண்டும்.
நான்காமிடோஜெனிக் (Noncomedogenic) தன்மை கொண்டதா என பார்த்து வாங்க வேண்டும். அதாவது நம் சரும துவாரங்களை அடைக்காமல், பருக்களை ஏற்படுத்தாதபடி இருக்க வேண்டும். வியர்வை மற்றும் தண்ணீர் ரெசிஸ்டன்ட்டாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.