Doctor Vikatan: விபத்தில் ஏற்பட்ட தலைக்காயம்… இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எத்தனை நாள்கள் ஆகும்? | Doctor Vikatan: head injury… how many days will it take to return to normal life?

Share

Doctor Vikatan: கடந்த 2020- ம் வருடம், 6வது மாதம் இரு சக்கர வாகன சாலை விபத்தில் சிக்கிய எனக்கு, ஸ்டேஜ் 1 என்ற தலைக்காயம் ஏற்பட்டது. அதையடுத்து சுமாராக 3 மாதங்களுக்கு சுயநினைவிழந்த நிலையில் இருந்தேன். பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி போன்றவற்றின் மூலம் மீண்ட எனக்கு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எத்தனை நாள்கள் ஆகும்?

– Vevaigai Suresh, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மற்றும் வலிப்புநோய் சிறப்பு மருத்துவர் அருண்குமார்

நரம்பியல் மற்றும் வலிப்புநோய் சிறப்பு மருத்துவர் அருண்குமார் | சென்னை.

நரம்பியல் மற்றும் வலிப்புநோய் சிறப்பு மருத்துவர் அருண்குமார் | சென்னை.

தலையில் ஏற்படும் காயங்களை பொதுவாக கிரேடு 1, கிரேடு 2, கிரேடு 3 என மூன்றாகப் பிரிக்கலாம். மைல்டானது, மிதமானது, தீவிரமானது என அர்த்தம்.

காயத்தை எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்தால் கிரேடு 1-ல் சாதாரணமாக இருக்கும். கிரேடு 2-ல் சாதாரணமாகவோ, ஓரளவு அசாதாரணமாகவோ இருக்கும். கிரேடு 3-ல் அசாதாரணமாக மட்டுமே இருக்கும். கிரேடு 1-ல் நினைவிழப்பு 30 நிமிடங்களை விட குறைவாக இருக்கும். கிரேடு 2-ல் 30 நிமிடங்கள் முதல் 24 மணி நேரம் வரை இருக்கும். கிரேடு -3ல், 24 மணி நேரத்துக்கும் அதிகமாக இருக்கும்.

அம்னீஷியா எனப்படும் மறதி பாதிப்பு, கிரேடு 1-ல் 24 மணி நேரத்துக்கும் குறைவாக இருக்கலாம். கிரேடு -2-ல் 7 நாள்கள்வரை அது தொடரலாம். கிரேடு -3-ல் அதைவிட அதிகமாக நீடிக்கும். இது பொதுவான அளவுகோல்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com