Doctor Vikatan வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடுமா? | Does plantain stem juice cure kidney stones?

Share

உடலைக் குளிரச் செய்யும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சரியான தூக்கம், வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது, வெட்டிவேரும் விளாமிச்சை வேரும் ஊறவைத்த தண்ணீரைப் பருகுவது, தாழம்பூ சேர்த்த பானங்களைக் குடிப்பது போன்றவை உதவும்.

முள்ளங்கி

முள்ளங்கி

சிறுநீரகக் கற்களைப் போக்க வாழைத்தண்டை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது, சாலட்டாக எடுத்துக்கொள்வது போன்றவற்றுடன் முள்ளங்கி, மூக்கிரட்டை, சிறுபீளை, நெருஞ்சில், ஆவாரம்பூ, பூசணிச்சாறு, வெள்ளரி விதை, கற்றாழை, கறிவேப்பிலை போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரை சமைக்கும்போது தக்காளி சேர்த்துச் சமைப்பதைத் தவிர்க்கவும். கீரையோடு பூண்டு மட்டும் சேர்த்துக் கடைந்து சாப்பிடுவது போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com