Doctor Vikatan: சிலருக்கு குரலில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஏன்? ஆண் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதில் குரல் உடைந்து மாறும் செயல் நடக்காமல் போக வாய்ப்பு உண்டா? குரல் மாற்றத்துக்கு சிகிச்சைகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
ஆண் குழந்தைகளுக்கு 10-12 வயதுக்குப் பிறகு மழலைக்குரல் மாறி, குரல் உடைவது நிகழும். அரிதாக, சிலருக்கு குரல் மாறா மலே இருக்கும். ஸ்பீச் தெரபி மூலம் இதைச் சரி செய்யலாம். ஹார்மோன் பிரச்னைகள் காரணமாகவும் இப்படி சிலருக்கு குரல் மாறாமல் இருக்கும். தேவையைப் பொறுத்து சிலருக்கு அறுவை சிகிச்சைகூட தேவைப்படலாம்.