என் வயது 57. பீரியட்ஸ் நின்று ஒன்றரை வருடம் ஆகிறது. இந்நிலையில் இப்போது திடீரென ரத்தப்போக்கு இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? என்ன டெஸ்ட் செய்ய வேண்டும்?
– சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.
“57 வயதில், மாதவிடாய் நின்று மெனோபாஸ் வந்தபிறகு இருப்பதாகச் சொல்லப்படும் ரத்தப்போக்கு ஆபத்தான ஓர் அறிகுறி. 50 வயதுக்கு மேல் ஒரு வருடத்துக்கு, அதாவது தொடர்ந்து 12 மாதங்களுக்கு பீரியட்ஸ் வரவில்லை என்றால் அதை பீரியட்ஸ் நிரந்தரமாக நின்றுபோகும் மெனோபாஸ் என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
அதன்பிறகு ரத்தப்போக்கே இருக்கக்கூடாது. ஒரே ஒரு துளி ரத்தப்போக்கு இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

மெனோபாஸுக்கு பிறகு இப்படி ப்ளீடிங் ஆக பல காரணங்கள் இருக்கலாம். சாதாரண கர்ப்பப்பை கட்டி முதல் புற்றுநோய் வரை அந்தக் காரணம் எதுவாகவும் இருக்கலாம். புற்றுநோய் எனும் பட்சத்தில் அது கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய், சினைப்பை என எதில் வேண்டுமானாலும் வரலாம். எனவே உங்கள் விஷயத்தில் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் உடனடி மருத்துவ ஆலோசனையும் பரிசோதனைகளும் அவசியம்.”
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?