Doctor vikatan – முதியவர்களை பாதிக்கும் நீர்ச்சத்துக் குறைபாடு… தீர்வுகள் என்ன?|Doctor Vikatan – What are the solutions for dehydration affecting the elderly

Share

Doctor Vikatan: என் வயது 67. அடிக்கடி உடல்நலமின்றி படுத்து விடுகிறேன். என்னைப் பரிசோதிக்கும் மருத்துவர் உடலில் நீர்ச்சத்து குறைந்திருப்பதாகவும் நுரையீரலில் சளி சேர்ந்திருப்பதாகவும் சொல்லி மருந்துகள் தருகிறார். சில நாள்களில் மீண்டும் அதே பிரச்னை வருகிறது. இது ஏன்? தவிர்க்க முடியுமா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

நீர்ச்சத்துக் குறைபாடு என்பது சிறு குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் பாதிக்கும். நம் உடலில் `இன்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட்ஸ்’, `எக்ஸ்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட்ஸ்’ என முக்கியமான இரண்டு இருக்கும்.

அதாவது செல்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய நீர்ச்சத்து மற்றும் செல்களுக்கு வெளியே இருக்கக்கூடிய நீர்ச்சத்து ஆகியவற்றைக் குறிப்பவை இவை. இவற்றில் மிக முக்கியமானது `இன்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட்ஸ்’.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது அனைத்து உறுப்புகளிலும் அதன் தாக்கம் ஏற்படும். மிக முக்கியமாக மூளை, இதயம் மற்றும் சிறுநீரகங்களில் அந்தத் தாக்கம் பெரிதாகத் தெரியும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com