Doctor Vikatan: முக அழகையே கெடுக்கும் சருமத் துவாரங்கள்… நிரந்தரமாகப் போக்க சிகிச்சைகள் உண்டா? | Doctor Vikatan: Are there any treatment to get rid of facial pores permanently?

Share

Doctor Vikatan: என் வயது 30. சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருப்பது என் முகப்பொலிவையே கெடுக்கிறது. சருமத்துவாரங்கள் பெரிதாக இருக்க என்ன காரணம்? இந்தப் பிரச்னையை நிரந்தரமாக சரியாக்க சிகிச்சைகள் ஏதும் இருக்கின்றனவா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமத்துவாரங்களை நிரந்தரமாக நீக்க முடியுமா என்ற கேள்வி இன்று நிறைய பேருக்கு இருக்கிறது. அதற்கு முன் சருமத் துவாரங்கள் இருப்பது சாதாரணமானதா, அசாதாரணமானதா, அதற்கு சிகிச்சை அவசியமா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.

சருமத்துவாரங்கள் பொதுவாக, மூக்கு, கன்னங்களுக்கு அருகில் இருக்கும். நம் சருமத்தில் எண்ணெய்ப்பசை சுரக்கும். சிலருக்கு இது அளவுக்கதிகமாகச் சுருக்கும். அதனால் பருக்கள் அதிகமிருக்கும். முகத்திலுள்ள சருமம் வீக்கத்துடன் காணப்படும். இதனால் சருமத்துவாரங்கள் பெரிதாகி, வெளியே தெரியும். நம்முடைய சீதோஷ்ணநிலை காரணமாகவும் சிலருக்கு சருமத் துவாரங்கள் வெளிப்படையாகத் தெரியும். இது சாதாரணமானதுதான். ஆனால் அது முக அழகையே கெடுக்கும்படி பெரிதாகத் தெரிவதால்தான் பலரும் அது குறித்துக் கவலை கொள்கிறார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com