Doctor Vikatan: ஆங்ஸைட்டி எனப்படும் மனப்பதற்றம் காரணமாக முதுகுவலி வர வாய்ப்பு உண்டா?
– Manobala, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.
மனப்பதற்றத்துக்கும் முதுகுவலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால் பலரும் மனப்பதற்றத்தின் போது, மூச்சை இறுக்கிக் கொள்வது, உடலை டைட்டாக்கிக் கொள்வது போன்றவற்றை தன்னையும் அறியாமல் செய்வார்கள். அதன் காரணமாக தூங்கும்போது உடலின் பொசிஷனானது தளர்வாக இருக்காது. உட்காரும்போது உடலை இறுக்கியபடியே இருப்பார்கள்.
இப்படித் தொடர்ந்து உடலை இறுக்கி வைத்திருப்பதன் விளைவாக, தசைப்பிடிப்பு ஏற்பட்டு, மேல் மற்றும் அடி முதுகில் வலியை ஏற்படுத்தும். இது தவிர ‘சைக்கோ சொமாட்டிக்’ என்றொரு பாதிப்பும் இருக்கிறது.
சைக்கோ என்பது மனம்… சொமாட்டிக் என்பது உடல்… பொதுவாக ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அழுகை வரும், தனிமை உணர்வு இருக்கும், மனநிலை மோசமாக இருக்கும்.