எனவே, நாம் தேர்ந்தெடுக்கும் சோப்பானது சருமத்தின் பி.ஹெச் அளவிலேயே இருக்க வேண்டும். சோப்பின் பி.ஹெச் அளவானது அதிகரிக்கும்போது, அது நம் சருமத்தின் பி.ஹெச் அளவையும் அதிகரித்துவிடும்.
சருமத்தின் பி.ஹெச் அளவு அதிகரிக்கும்போது, அது நீர்ச்சத்தை இழந்து வறண்டு போகும். சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் சிண்டெட் பார் (Syndet bar) என்பதை உபயோகிக்கலாம். மற்றவர்கள் நம் சருமத்தின் ஈரப்பதத்தை பாதிக்காதவகையில் பி.ஹெச் பேலன்ஸ் உள்ள மைல்டான சோப்தான் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.