Doctor Vikatan: பீரியட் பேன்ட்டீஸ் உபயோகிப்பது ஆரோக்கியமானதா?

Share

Doctor Vikatan: சமீபகாலமாக பீரியட்ஸ் பேன்ட்டீஸ் என ஒன்று விளம்பரப்படுத்தப் படுகிறது. அதன் உபயோகம் என்ன…. நாப்கினுக்கு மாற்றாக அதை உபயோகிக்கலாமா…. பீரியட்ஸ் பேன்ட்டீஸ், பேன்ட்டீ லைனர்ஸ் போன்றவற்றை உபயோகிப்பது ஆரோக்கியமானதா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

பீரியட்ஸ் பேன்ட்டீஸ் உபயோகிக்கலாமா என்று தெரிந்து கொள்வதற்கு முன்,  அதன் உபயோகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பீரியட்ஸ் பேன்ட்டீஸ் என்பவை பெண்கள் வழக்கமாக உபயோகிக்கும் உள்ளாடை போன்றதுதான்.

நாப்கின் எப்படி பீரியட்ஸ் நாள்களின் ரத்தப்போக்கை உறிஞ்சிக் கொள்ளுமோ, அதே போல் உறிஞ்சிக் கொள்ளும். இதில் பாலியூரிதின் லேமினேட்…..எனப்படும் ஃபேப்ரிக் இருக்கும். இது  ப்ளீடிங்கை உறிஞ்சிக் கொள்ளும்.

இதை உபயோகிக்கும் போது நாப்கின் உபயோகிக்க வேண்டியிருக்காது. ஆனால் அதே சமயம் இதை நாள் முழுவதும் உபயோகிக்க முடியாது. 

நாப்கின்

8  முதல் 10 மணிநேரத்துக்கொரு முறை இந்த பேன்ட்டீஸை மாற்ற வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு உபயோகிக்கும் டயாப்பரில் உள்ளதுபோல இதில் லீக் ப்ரூஃப் கவரிங் இருப்பதால், ப்ளீடிங் வெளியே கசியாது. இதனால் சமீப காலமாக நிறைய பெண்கள் இதை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதே சமயம் பீரியட் பேன்ட்டீஸ் உபயோகிப்பதில் நடைமுறை சிக்கல்களும் உள்ளன. இது சற்று காஸ்ட்லியானது. இதைத் துவைத்துப் பயன்படுத்துவதும் சிரமம். நிறைய லேயர்கள் கொண்ட இந்த பேன்ட்டீஸை துவைத்துக் காயவைக்கும்போது, அதற்கு நீண்டநேரம் எடுக்கும்.

எனவே ஒரு பீரியட்ஸுக்கு உங்களுக்கு நான்கைந்து பேன்ட்டீஸ் தேவைப்படலாம். பணியிடங்களிலும் வெளியிடங்களிலும் இதை மாற்றுவதும் சிரமமாக இருக்கும். அதிக ப்ளீடிங் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது. நீண்ட நேரம் இதைப் பயன்படுத்துவதால் ப்ளீடிங் வாடை வீசலாம்.

underwear

கெமிக்கல் சேர்த்துச் செய்யப்பட்ட மற்றும் வாசனை சேர்த்துச் செய்யப்பட்ட நாப்கின், பேன்ட்டீஸ் எதுவுமே உபயோகிக்க ஏற்றவை அல்ல. ஏனெனில் அது வெஜைனா பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியாவை அழித்துவிடும்.

சிலவகை பீரியட் பேன்ட்டீஸில் அதிக அளவிலான பெர் அண்ட் பாலிஃப்ளுரோஆல்கைல் சப்ஸ்டன்ஸ்.  (per- and polyfluoroalkyl substances) இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இது அந்த பேன்ட்டீஸின் உள் மற்றும் வெளி லேயர்களில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை ‘ஃபார்எவர் கெமிக்கல்’ என்று சொல்கிறார்கள். இது அந்த பேன்ட்டீஸை எண்ணெய், தண்ணீர், வெப்பம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதாகச் சொல்கிறார்கள்.

Vaginal

இந்தப் பொருளானது சூழலுக்கு உகந்ததல்ல, அதிக நாள்கள் உபயோகிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம், கல்லீரல் பாதிக்கப்படலாம், கருத்தரிப்பதில் சிக்கல் வரலாம், சிலவகை புற்றுநோய் பாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

எனவே பீரியட்ஸுக்கான பிரத்யேக உள்ளாடை வாங்கும்போது PFAS ஃப்ரீ என குறிப்பிடப்பட்டிருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும். அவற்றில் இப்படிப்பட்ட கெமிக்கல்கள் வராது. நாப்கினோ, டாம்பூனோ, மென்ஸ்டுரல் கப்போ எது உபயோகித்தாலும் மாதவிடாய்கால சுகாதாரம் மிக முக்கியம்.

Menstrual Hygiene (Representational image)

பிறப்புறுப்புப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சாதாரண தண்ணீரால் கழுவினால் போதுமானது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வாசனை உள்ள பொருள்களை உபயோகிக்கக்கூடாது. பேன்ட்டி லைனர் என்பது லேசான ப்ளீடிங், வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்கு உபயோகிப்பது. அது பீரியட்ஸ் நாள்களில் உபயோகிக்க ஏற்றதல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com