Doctor Vikatan: பீரியட்ஸுக்கு முன்பு ஏற்படும் மனநிலை மாற்றங்கள்… தவிர்க்க வழிகள் | doctor vikatan – facing trouble before period – ways to avoid them

Share

Doctor Vikatan: என் வயது 25. பீரியட்ஸ் வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்து, எனக்கு மனநிலை மாறிவிடுகிறது. யாரைப் பார்த்தாலும் எரிச்சல், கோபம், அழுகை வருகிறது. இதை நினைத்தாலே அடுத்த மாத பீரியட்ஸ் குறித்த பயமும் சேர்ந்து கொள்கிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா…

மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா

மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை PMS (Pre Menstural Syndrome) எனப்படும் ‘ப்ரீ மென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்’ என்று சொல்வோம். இந்த பாதிப்பானது டீன் ஏஜில் தொடங்கி, மெனோபாஸ் வரை பலருக்கும் வரக்கூடிய சகஜமான விஷயம்தான்.

குறிப்பாக இளம் பெண்கள் பலரையும் இந்தப் பிரச்னை அதிகம் பாதிப்பதைப் பார்க்கிறோம். 28 முதல் 30 நாள்கள் சுழற்சியில் பீரியட்ஸ் வரும் பெண்களுக்கு, அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே பலவிதமான அறிகுறிகள் ஏற்படலாம்.

உடல் உப்புசம், மார்பகங்களில் கனத்த உணர்வு, மார்பகங்களில் வலி, திடீரென எடை அதிகரித்தது போன்ற உணர்வு, எரிச்சல், மனநிலையில் தடுமாற்றங்கள்… இவை எல்லாமே அத்தகைய அறிகுறிகள்தான். அப்படி ஏற்படுவது சகஜம்தான்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com