Doctor Vikatan: பீரியட்ஸில் ஒருநாள் மட்டுமே ப்ளீடிங்… பிரச்னையின் அறிகுறியா? | Doctor Vikatan- Bleeding only one day in periods…is it a sign of a problem?

Share

Doctor Vikatan: எனக்குத் தெரிந்து என் தோழிகள் பலரும் அதிக ப்ளீடிங்கால் அவதிப்படுகிறார்கள். என் பிரச்னையோ வேறு. எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல்நாள் ப்ளீடிங் ஆவதோடு சரி… பிறகு லேசான திட்டுத்திட்டாக ப்ளீடிங் ஆகுமே தவிர, முழு நாப்கினும் நனையும் அளவுக்கு ஆவதில்லை. என் வயது 38. குறைவான ப்ளீடிங் ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

பீரியட்ஸ் நாள்களில் ரத்தப்போக்கு குறைவாக இருப்பதென்பது நீங்கள் பயப்படுகிற அளவுக்கு பெரிய விஷயமே இல்லை. பீரியட்ஸின்போதான ரத்தப்போக்கு குறைய பல காரணங்கள் இருக்கலாம்.

உதாரணத்துக்கு திடீரென அதிக அளவில் எடையைக் குறைத்திருந்தாலோ, ஸ்ட்ரெஸ் காரணமாகவோ கூட பீரியட்ஸின் போதான ப்ளீடிங் குறையலாம். திடீரென ஜிம்மில் சேர்ந்து வொர்க் அவுட் செய்து, எடையைக் குறைப்பவர்களுக்கு ரத்தப்போக்கின் அளவு குறையலாம்.

சிலருக்கு எப்போதுமே ப்ளீடிங் அளவு குறைவாகவே இருக்கும். அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், திடீரென ப்ளீடிங் அளவு குறைவதற்கு மேற்குறிப்பிட்டவை தவிர, ஹார்மோன் காரணங்கள், தைராய்டு, பிசிஓடி போன்றவையும் காரணமாகலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com