Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை… வெயிலில் காட்டினால் போதுமா?- Doctor Vikatan: Jaundice in a newborn baby… is it enough to show it in the sun?

Share

Doctor Vikatan: பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது இன்று சகஜமாக உள்ளது. இதற்கு மருத்துவமனையில் கொடுக்கப்படும் லைட் தெரபி அவசியமா? சூரிய வெளிச்சத்தில் காட்டுவது போதுமானதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

 மாலா ராஜ்

மாலா ராஜ்

சுகப்பிரசவமோ, சிசேரியனோ… குழந்தை பிறந்த மூன்றாவது நாளன்று அதற்கு மஞ்சள் காமாலை உள்ளதா என்பதற்கான பிலிருபின் அளவு பார்க்கப்படும்.

பிரசவ காலத்தில் வரும் இத்தகைய மஞ்சள் காமாலை அவ்வளவு ஆபத்தானதல்ல. ஆனால் அப்படி இருந்தால் அதை அலட்சியப்படுத்தவும் முடியாது. பிலிருபின் அளவு சரிபார்க்கப்பட்டு, தேவைப்பட்டால் அந்தக் குழந்தைக்கு போட்டோதெரபி கொடுக்கப்படும்.

லைட் மூலமாக கொடுக்கப்படும் இதில் குழந்தையின் சருமத்தில் கதிர்கள் ஊடுருவி பிலிருபினை வெளியேற்றிவிடும். இதையடுத்து ஒன்றிரண்டு நாள்கள் போட்டோதெரபி கொடுத்துவிட்டு மீண்டும் பிலிருபின் அளவை செக் செய்து விட்டு வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com