Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு வயிற்றைச் சுற்றி வரும் தழும்புகளை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா? | doctor vikatan – Can scars around the belly after delivery be prevented in advance?

Share

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதி விரிவடைவதால், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படுகிற தழும்புகளைப் போக்க ஏதேனும் வழிகள் உண்டா? அதைத் தவிர்க்க முன்கூட்டியே ஏதேனும் க்ரீம் உபயோகிக்கலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா…

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

கர்ப்பமான முதல் மாதத்திலிருந்தே இதற்கான அக்கறை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது தரமான மாய்ஸ்ச்சரைசரை வயிற்றைச் சுற்றி மென்மையாகத் தடவி வரலாம். கண்ட கண்ட எண்ணெய்கள், மற்றவர்கள் பரிந்துரைக்கும் க்ரீம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, அதீதமாக எதையும் செய்ய வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் வயிற்றுப்பகுதியானது பலூன் மாதிரி மெள்ள மெள்ள விரிவடைந்துகொண்டே போகும். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப விரிய ஆரம்பிக்கும். அதனால் சருமப் பகுதியும் விரிவடைந்து, பிரசவத்துக்குப் பிறகு சுருங்குவதால் தழும்புகள் ஏற்படும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com