Doctor Vikatan: பாடி மசாஜ் செய்துகொள்வது உண்மையிலேயே பலன் தருமா? | Doctor Vikatan – Doctor explains benefits of body massage

Share

சரியான நபர்களால் முறையாகச் செய்யப்படும்போது மசாஜ் அருமையான பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உடல் அசதியாக இருக்கும்போது யாராவது நமக்கு கை, கால்களை அழுத்திப் பிடித்துவிட்டால் ஆனந்தமாக உணர்கிறோம் அல்லவா… அதுகூட ஒருவகையிலான மசாஜ்தான்.

மசாஜ் என்பது தசைகளை, தசைநார்களை அழுத்தி, நீவிவிடுகிற ஒரு சிகிச்சை. அதில் மிதமானது முதல் அழுத்தமானது வரை பல வகை உண்டு. உடலை ரிலாக்ஸ் செய்து புத்துணர்வைத் தரும் ஸ்வீடிஷ் மசாஜ், அடிபட்ட பிறகு தசைகளையும் இணைப்புத் திசுக்களையும் அழுத்திப் பிடித்துச் செய்யப்படும் டீப் மசாஜ், விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவோருக்கான ஸ்போர்ட்ஸ் மசாஜ், இறுக்கமான தசைநார்களை சரியாக்கும் ட்ரிக்கர் பாயின்ட் மசாஜ் என மசாஜில் பல வகை உண்டு.

Massage (Representational Image)

Massage (Representational Image)
Photo: Rajendran.L / Vikatan

நல்ல மசாஜ், ஸ்ட்ரெஸ்ஸை விரட்டும். களைப்பை நீக்கும். தசை இறுக்கங்களைப் போக்கி, உடலை ரிலாக்ஸ் செய்யும். வலிகளை நீக்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வேகமான இதயத்துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். பதற்றம், செரிமான கோளாறுகள், தலைவலி, தூக்கமின்மை, முதுகுவலி, நரம்புவலி, முதுகு மற்றும் கழுத்து வலிகளைக்கூட சரிப்படுத்துவதாகத் தகவல்கள் உள்ளன.

மருத்துவ காரணங்கள் ஏதுமில்லாவிட்டாலும் மசாஜ் தரும் ரிலாக்சேஷனுக்காகவே அதைச் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் அதிகம். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் மசாஜ் என்பது முக்கியமான ஒரு பிரிவு. பல நோய்களுக்கும் அது தீர்வளிப்பதாகச் சொல்கிறது ஆயுர்வேதம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com