Doctor Vikatan: பற்கள் விழுவது போன்ற கனவு… அடிக்கடி வருவதால் நிஜத்திலும் நடக்குமா?| Doctor Vikatan: The dream of teeth falling out…does it happen in reality

Share

Doctor Vikatan: என் வயது 34. பற்கள் எல்லாம் விழுந்துவிடுவது போன்ற கனவு அடிக்கடி தொடர்கிறது. அது உண்மையில் நடந்துவிடுமோ என பயமாக இருக்கிறது. இந்தக் கனவை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

சிக்மண்ட் ஃப்ராய்டின் `தி இன்டர்ப்ரிட்டேஷன் ஆஃப் ட்ரீம்ஸ்’ என்ற பிரபலமான புத்தகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் கனவுகளை அலசுவதை ஒரு கலை என்றே சொல்லலாம்.

நம் மூளையின் செயல்பாடுதான் கனவு. பாம்பு துரத்துவது போல, பற்கள் விழுவது போல, திடீரென நமக்கு வயதாகிவிட்டது போல, நமக்கு அடிபடுவது போல, எங்கேயோ ஓடிக்கொண்டே இருப்பது போல, கீழே விழுவது போல, இருட்டில் பாம்பு, தேளுக்கு மத்தியில் இருப்பது போல, பாலியல் கற்பனைகள்… இப்படி பொதுவான கனவுகள் சில உண்டு. இவையெல்லாம் ஏன் பொதுவான கனவுகளாக இருக்கின்றன? இப்படிப்பட்ட விஷயங்கள் நம் உணர்வுகளைத் தூண்டும். மூளையில் நமக்கு சிந்திப்பதற்கான பகுதி இருப்பது போல உணர்வுகளுக்கான பகுதியும் ஒன்று இருக்கும். சிறு குழந்தைகள் தூக்கத்தில் சிரிப்பதையும் அழுவதையும் பார்க்கலாம். இதுவும் சகஜம்தான்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com