Doctor Vikatan: பரம்பரையாக பாதிக்குமா ஹார்ட் அட்டாக்? | Doctor Vikatan: Can heart attack be hereditary?

Share

நம்மில் பலருக்கும் தெரிந்தே உடலில் ரிஸ்க் காரணிகள் பல இருக்கும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகை மற்றும் குடிப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் செய்யாதது, தூக்கம் குறைவாக இருப்பது, ஸ்ட்ரெஸ் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். நீரிழிவையும் ரத்த அழுத்தத்தையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சிக்கென தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றில் கவனமாக இருந்தாலே இதயநோய்களின் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு சிலர் எந்த மருத்துவப் பரிசோதனைகளையும் செய்யாமல் இருப்பார்கள். அது மிகத் தவறு. வருடம் ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ரிஸ்க் வாய்ப்பைத் தெரிந்துகொள்ள சிலருக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட் தேவைப்படலாம்.

மாரடைப்பு

மாரடைப்பு

ஹெச்எஸ் சிஆர்பி (High-Sensitivity CRP (hsCRP) மற்றும் கால்சியம் ஸ்கோர் (Calcium Score Screening) போன்ற டெஸ்ட்டுகளை செய்வதன் மூலம் ரிஸ்க் அளவை கண்டறியலாம். இந்தப் பரிசோதனைகள் அனைவருக்கும் தேவைப்படாது. குடும்பப் பின்னணியில் இதயநோய் பாதிப்பு இருந்தாலோ, ரிஸ்க் பிரிவில் இருந்தாலோ, மருத்துவருடன் கலந்து பேசி, செய்யப்பட வேண்டிய பரிசோதனைகள் இவை.

எனவே, பரம்பரையாக பாதிக்கும் ஆபத்து ஓரளவு இருக்கும் நிலையிலும், அதைத் தடுக்கவும் நம்மிடம் வழிகள் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com