Doctor Vikatan: என் வயது 36. கடந்த 3 வருடங்களாக எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. அதற்காக மருந்துகளை எடுத்து வருகிறேன். என் மனைவி இப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் அவர் படித்த ஒரு செய்தியில், நீரிழிவு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஆணின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்காது என்றும், பிறக்கும் குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்ததாகச் சொல்கிறார். இது உண்மையா…. எங்கள் சநதேகத்தைத் தெளிவுபடுத்துவீர்களா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி

நீங்கள் இருவரும் முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளைவிட மிக மிக ஆபத்தானது நீரிழிவு நோய். உலகம் முழுவதும் இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான, மோசமான நோய்களில் ஒன்று நீரிழிவு.