தினமும் காலையில் தலைக்குக் குளிக்க நேரமில்லாதவர்கள், மாலையிலாவது குளிக்கலாம். மருந்துக் கடைகளில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில், கேப்ஸ்யூல் வடிவில் கிடைக்கும். 50 மில்லி தேங்காய்ப் பாலில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூலில் மூன்றை உடைத்துச் சேர்க்கவும். நாட்டு மருந்துக் கடைகளில் பொடுதலைப் பொடி, வில்வப் பொடி கிடைக்கும். இவற்றில் தலா 1 டீஸ்பூன் சேர்த்துக் கலவையில் கலந்துகொள்ளவும்.
முதல்நாள் இரவு தலைக்கு எண்ணெய் வைத்து, மறுநாள் இந்தக் கலவையைத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். காலையில் எண்ணெய் வைத்து அதன் மேல் கலவையைத் தடவி, ஊறியும் குளிக்கலாம். மைல்டான ஷாம்பூ பயன்படுத்தவும். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்து வந்தாலே உங்கள் பிரச்னை சரியாகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.