அப்டாமினல் அயோடிக் ஸ்டென்ட் பொருத்துவதன் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். தற்போதைய மருத்துவ முன்னேற்றத்தின்படி, இந்தச் சிகிச்சையை ஓப்பன் ஹார்ட் சர்ஜரி தேவையின்றி, எண்டோவாஸ்குலர் (endovascular) சிகிச்சை முறையில் பொருத்தலாம்.
உயர் ரத்த அழுத்தம், புகைப்பழக்கம், அதீத ஸ்ட்ரெஸ் போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம். அதிலோஸ்க்ளெரோசிஸ் ( Atherosclerosis) என்ற நோய்தான் இதற்கான அடிப்படை காரணம். நம் உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து, அவை சுருங்கிவிடுவதால் ஏற்படும் நிலைதான் அதிலோஸ்க்ளெரோசிஸ். இது ஒரு நீண்டகால நோய். இது பல ஆண்டுகளாக மெள்ள மெள்ள உருவாகியிருக்கும். இந்தப் பிரச்னையானது சில நேரங்களில் அடைப்பாக வெளிப்படலாம்… சில நேரங்களில் வீக்கமாக வெளிப்படலாம்.
அடிவயிற்றில் வீக்கம் ஏற்படும்போது அதை நேரடியாக இதய பாதிப்போடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், ஏற்கெனவே குறிப்பிட்டபடி அயோடிக் அனியூரிசம் உள்ளிட்ட வேறு பிரச்னைகளுக்கு இது காரணமாலாம். எனவே, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, வாழ்வியல் முறைகளில் அக்கறையோடு இருக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட இடைவெளிகளில் முழு உடல் பரிசோதனை செய்து பார்ப்பதும் மிக மிக அவசியமாகிறது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.