Doctor Vikatan: தொடைப்பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா? | Doctor Vikatan: Is it possible to get rid of dark spots on thighs

Share

உள்ளாடைகளை நன்கு துவைத்து, கொஞ்சம்கூட ஈரமின்றி காயவைத்து, முடிந்தால் அயர்ன் செய்து அணிவது சிறப்பு. ஆன்டிஃபங்கல் பவுடர் போட்டுக் கொண்டு அதன் பிறகு உள்ளாடை அணிவதன் மூலம் அந்தப் பகுதியில் வியர்வை தங்குவது தவிர்க்கப்படும். வியர்வை தங்கினால்தான் இன்ஃபெக்ஷன் வரும்.

பிறப்புறுப்புப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா என்ற கேள்வியோடு நிறைய இளம்பெண்கள் வருகிறார்கள். தென்னிந்தியர்களின் சருமத்தில் அந்த நிறத்துக்கு காரணமான மெலனின் செல்கள் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதனால் நம் சரும நிறம் மாநிறத்திலும் அந்தரங்க உறுப்புகளின் சருமமானது அதைவிட ஒன்றிரண்டு ஷேடு இன்னும் டார்க்காகவோ இருக்கக்கூடும்.

இந்தக் கருமையைப் போக்குவதற்காக க்ரீமோ, ப்ளீச்சோ, சிகிச்சையோ செய்வதன் மூலம் அந்தப் பகுதி சருமத்துக்கு மேலும் பாதிப்பையே நாம் ஏற்படுத்துகிறோம். அந்தரங்க உறுப்புகளில் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வராமல் பார்த்துக் கொள்வதும், அந்த இடத்து ரோமங்களை ட்ரிம் செய்துவிடுவதும், சுத்தமான உள்ளாடைகளை அணிவதும்தான் ஆரோக்கியத்துக்கு அடிப்படை.

எனவே தேவையற்ற தகவல்களை நம்பி அந்தரங்கப் பகுதியின் சரும நிறத்தை மாற்ற நினைப்பது தேவையற்றது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com