தூக்கமின்மை, முடி உதிர்வு, செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இல்லாதது போன்ற பிரச்னைகளும்கூட லாங் கோவிட் பாதிப்பால் ஏற்படலாம் என்று தெரிகிறது.
தீவிர கோவிட் பாதிப்பு, வயதானவர்களைக் குறிவைத்தது போல, லாங் கோவிட் பாதிப்பானது இள வயதினரை, அதிலும் குறிப்பாக, பெண்களை அதிகம் தாக்குவதாகத் தெரிகிறது. லாங் கோவிட் பாதிப்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதற் கில்லை. சிலருக்கு ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. சிலருக்கு ஸ்ட்ரோக் வருகிறது.
இவையெல்லாம் நமக்கு உணர்த்தும் செய்தி ஒன்றுதான். கோவிட் பாதிப்பை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. லாங் கோவிட் பாதிப்புக்கென பிரத்யேக சிகிச்சைகள் இல்லை. எனவே, கோவிட் வராமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கையோடு இருப்பதும், தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதும், மூன்றாவது தவணையையும் செலுத்திக்கொள்வதும்தான் ஒரேவழி.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.