Doctor Vikatan: தக்காளி சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா? | Doctor Vikatan: Can eating tomatoes cause kidney stones?

Share

அடிக்கடி கழிவறைக்குச் செல்லத் தயங்கிக் கொண்டு தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்கிறார்கள் பலரும். இது மிகவும் தவறானது. இவை தவிர, அளவுக்கதிமாக அசைவ உணவுகள் சாப்பிடுவது, நட்ஸ் அதிகம் சாப்பிடுவது, அளவுக்கதிமாக தக்காளி சாப்பிடுவது போன்ற வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

இந்தப் பிரச்னையோடு வருபவர்களுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் உணவுக்கட்டுப்பாடுகளை வலியுறுத்துவதில்லை. எப்படிப்பட்ட உணவிலும் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும் காரணியும் இருக்கலாம், அவற்றை எதிர்க்கும் தன்மையும் இருக்கலாம். எனவே ஆரோக்கியமாகவும் அளவாகவும் சாப்பிட மட்டுமே மருத்துவர்கள் அறிவுறுத்துவோம்.

தக்காளி சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதில் ஓரளவு உண்மை இருக்கிறது. எந்த உணவையும் எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம். தக்காளி நல்லது என்ற எண்ணத்தில் அதை கிலோ கணக்கில் சாலடாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ சாப்பிடுவது சரியானதல்ல. சாம்பார், ரசம் போன்றவற்றில் சேர்க்கும் ஒன்றிரண்டு தக்காளியால் பிரச்னை இல்லை.

சிறுநீரகம் (Kidney)

சிறுநீரகம் (Kidney)

இது தக்காளிக்கு மட்டுமல்ல, கீரை, காலிஃபிளவர், புரொக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றுக்கும் பொருந்தும். கிட்னி ஸ்டோன்ஸுக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ஸ்கேன் எடுக்கப்படும். மறுபடி மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்னொரு ஸ்கேன் எடுக்கப்படும். அதில் கற்கள் உருவாகும் தன்மை அதிகமிருப்பது தெரியவந்தால் அவர்களது உணவுப்பழக்கத்தைக் கண்காணிக்கச் சொல்வோம்.

உதாரணத்துக்கு, கீரை எடுத்துக்கொள்பவர்களை தினமும் அதைச் சாப்பிட வேண்டாம் என்றும், வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள் மட்டும் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்துவோம். காலிஃபிளவர், முட்டைகோஸ், புரொக்கோலி போன்றவற்றை ஒரே நாளில் சேர்த்துச் சாப்பிட வேண்டாம் என்றும் சொல்வோம். தக்காளிக்கும் இதே விதி பொருந்தும். அளவோடு சாப்பிட்டால் எந்த உணவும் ஆபத்தாவதில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com