Doctor Vikatan: டிரெட்மில் வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை?-what to look for when buying a treadmill for home use

Share

எங்கள் வீட்டில் எல்லோரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என டிரெட்மில் ஒன்று வாங்கினோம். ஆனால் ஒருவாரம் கூட அதைப் பயன்படுத்தவில்லை. இப்போது துணி காயவைப்பதற்குத்தான் அது பயன்படுகிறது. இடத்தை அடைத்துக்கொண்டு நிற்கிறது. பல வீடுகளிலும் இப்படித்தான் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். உடற்பயிற்சிக் கருவிகளை தொடர்ந்து பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்? எப்படி மோட்டிவேட் செய்துகொள்வது?

– பவித்ரா, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

இந்த விஷயம் பெரும்பாலான வீடுகளில் நடக்கும் சகஜமான ஒன்றுதான். ஒரு பொருளை ஆசையாக வாங்குவோம். ஆனால் வாங்கிய பிறகு அதைப் பயன்படுத்தும் ஆர்வம் இல்லாமல் போய்விடும். நீங்கள் கேட்டுள்ள மோட்டிவேஷனை எந்தக் கடையிலும் வாங்க முடியாது. அது உங்களுக்குள்ளிருந்துதான் வர வேண்டும்.

ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்

ஜிம்முக்குப் போக வேண்டாம் என நினைத்து இப்படி வீட்டிலேயே பயன்படுத்தும் வொர்க் அவுட் கருவிகளை வாங்கி வைப்பார்கள் சிலர். ஆனால் அவற்றைப் பயன்படுத்த மாட்டார்கள். அதே மாதிரிதான் ஜிம்மில் சேர பணம் கட்டுபவர்களும்…. பணம் கட்டும்போது இருக்கும் வேகம், பிறகு காணாமல் போய்விடும். வீட்டிலேயே வொர்க் அவுட் செய்வதோ, ஜிம்மில் சேர்வதோ எதுவானாலும் உங்களை நீங்கள் முதலில் மனத்தளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com