Doctor Vikatan: சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்துக் குறைபாடு மிகவும் சகஜமாக இருப்பதைக் கேள்விப் படுகிறோம். அவர்கள் சைவ உணவுகளிலேயே புரதச்சத்தை அதிகரித்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் புரதச்சத்து மிக முக்கியம். அதாவது ஹார்மோன்கள் சீராக இருக்க, தசைகளின் ஆரோக்கியத்துக்கு, நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க, திசுக்கள், செல்களின் வளர்ச்சிக்கு, காயங்கள் ஆறுவதற்கு, உடலின் பிஹெச் அளவை சரியாக வைத்துக்கொள்ள, உடலின் நீர்ச்சத்தை சரியாக வைத்துக்கொள்ள, உடலியக்கத்துக்கான ஆற்றலை அளிக்க… இப்படி பல வேலைகளுக்கும் புரதச்சத்து இன்றியமையாததாகிறது.
சைவ உணவுக்காரர்கள் கீழ்க்காணும் வழிகளில் புரதத்தின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். சாம்பார் வைக்கும்போது அதை நீர்க்கத் தயாரிக்காமல் கெட்டியாகச் செய்யுங்கள். அதற்கேற்றபடி பருப்பின் அளவை அதிகரியுங்கள்.