ஆண்குறியின் முன்தோல் (foreskin) துவாரம் சிறியதாக இருப்பது, அடைப்பு (Phimosis) ஏற்படவும், சிறுநீர்க் கிருமித் தொற்று ஏற்படவும், பொதுவான காரணமாக இருக்கும்.
இந்தப் பிரச்னையை முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை (Circumcision) எனப்படும் எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். அடிக்கடி சிறுநீர்த் தொற்று பிரச்னை ஏற்பட்டாலோ, அடைப்பு (Tight Phimosis) அதிகமாக இருந்தாலோ மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.