ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் அது பாக்டீரியா தொற்று வளரக் காரணமாகி, சிறுநீர்ப்பாதை தொற்றுக்கும் வழிவகுக்கும். ஒவ்வொரு முறை மலம் கழிக்கும் போதும் முறையாக சுத்தம் செய்யப் பழக வேண்டும். அப்படிச் செய்யாவிட்டாலும் ஆசனவாயும் வெஜைனா மற்றும் சிறுநீர்ப்பாதை அருகருவே இருப்பதால் தொற்று எளிதில் பாதிக்கும். சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அதை அடக்கவே கூடாது. அப்படி அடக்கினால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் தேங்கி, தொற்று ஏற்பட காரணமாகும்.
மீண்டும் மீண்டும் தொற்று வரும் பட்சத்தில் சிறுநீரக மருத்துவரை அணுகி, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.
சிறுநீர்ப்பாதையின் அமைப்பும் இடுப்பெலும்பு பகுதியின் அமைப்பும் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். சிலருக்கு நீண்டநாள் கொடுக்கக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். தொற்றின் தன்மை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பொறுத்தே சிகிச்சை அமையும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.