சர்க்கரைச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து சற்று அதிகமாகவும் உள்ள ஆப்பிள், கொய்யாக்காய், செங்காயாக உள்ள பப்பாளி, பேரிக்காய், சாத்துக்குடி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒன்று என்ற அளவில் (பப்பாளி என்றால் இரண்டு துண்டுகள்) எடுத்துக்கொள்ளலாம்.
ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த அட்வைஸ் பொருந்தும். அப்படி இல்லாதவர்கள் பழங்களைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் சர்க்கரை அளவு மிகமிக அதிகம்.
‘அப்படியானால் மாம்பழ சீசனில்கூட நாங்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாதா….’ என்றால் வழக்கமாக நீங்கள் சாப்பிடும் 4 இட்லியில் இரண்டைக் குறைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக இரண்டு துண்டு மாம்பழம் சாப்பிடலாம். அந்த அளவு தாண்டாமல் பார்த்துக்கொள்ளும்வரை பிரச்னை இல்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.