சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தேன் மற்றும் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா?
– ஜோதி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
“நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவாகத் தேன் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. ஒரு டீஸ்பூன் தேனில் 4 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும் என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வது சரியானதல்ல.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். வெறும் நெல்லிக்காய் சாப்பிடலாமா என்று கேட்டால் நிச்சயம் சாப்பிடலாம். அதிலுள்ள வைட்டமின் சி சத்தும், நச்சுநீக்க தன்மையும் ஆரோக்கியத்துக்கு உதவும். தேனில் பொட்டாசியம் சத்து அதிகமில்லை. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு அதிகம் சேர்த்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்படுவார்கள்.
அதே நேரம் பொட்டாசியம் சத்துள்ள காய்கறிகள் மற்றும் உணவுகளைச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்படும்.