தவிர, நீரிழிவு பாதித்தவர்களுக்கு சாதாரண நபர்களைவிட, பல்சொத்தை பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம். அந்த பாதிப்பு தீவிரமாகவும் இருக்கலாம். ஈறுகளை பாதிக்கும் Periodontitis பிரச்னைக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் பிரச்னைகள் இருந்தாலோ, வாயில், பற்களில் மோசமான இன்ஃபெக்ஷன் இருந்தாலோகூட வாய் துர்நாற்றம் இருக்கலாம்.
சிலருக்கு ரத்தச் சர்க்கரை கட்டுப்பாடில்லாமல் இருக்கலாம். இந்நிலையில் அவர்களது உடல் கீட்டோசிஸ் என்ற நிலையில் இருக்கும். அப்போதும் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். இதை கவனிக்காமல் விட்டால் பற்சிதைவில் முடியலாம்.
சிலருக்கு பற்கள் ஆடிக்கொண்டிருக்கும் அல்லது பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகமாக இருப்பதால் உணவுத்துகள்கள் மாட்டிக்கொள்ளும். அதனாலும் வாய் துர்நாற்றம் இருக்கும். நீரிழிவு நோயாளிகளிடம் யாராவது வாய் துர்நாற்றம் வீசுவதாகச் சொன்னால் அதை அலட்சியம் செய்யாமல் உடனே நீரிழிவு நோய் மருத்துவரையோ, பல் மருத்துவரையோ அணுகி, காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.