Doctor Vikatan: சரும அழகை மேம்படுத்துமா கழுதைப் பால் சோப்? | Doctor Vikatan: Does Donkey Milk Soap Improve Skin Beauty?

Share

Doctor Vikatan: கழுதைப் பால் மற்றும் ஆட்டுப்பாலில் தயாரிக்கப்படும் சோப்புகள் இப்போது விற்பனையாகின்றன. அவை உண்மையிலேயே சருமத்துக்கு நல்லதா? எல்லோரும் பயன்படுத்தலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக் | சென்னை

அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக் | சென்னை

பாலுக்கு இயல்பிலேயே ‘டீப் கிளென்சிங்’ எனப்படும் ஆழமாகச் சுத்தப்படுத்தும் தன்மை உண்டு. அதிலுள்ள லாக்டிக் அமிலமானது நம் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். அந்த வகையில் பால் சருமத்துக்கு நல்லது.

ஆட்டுப்பால், கழுதைப் பால் போன்ற பிரத்யேக பால்களில் கொழுப்புச்சத்து அதிகமிருக்கும். கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால் அவை சரும வறட்சியைப் போக்கும். இந்தப் பால்களில் உள்ள கொழுப்புச்சத்தானது சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடச் செய்து, இளமையாக வைத்திருக்க உதவும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com