தூரப்பார்வை குறைந்துவிடும். இப்படி கண்புரை பாதிப்பின் அறிகுறிகள் நிறைய… அறிகுறியை உணர்ந்ததும் கண் மருத்துவரை அணுகுவது சரியானது. அதே நேரம், கண்புரை பாதிப்பு என்பது முதிர்ச்சியடைந்த நிலையை எட்டும்வரை அதற்கு அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் மருத்துவர்கள், கண்புரையானது, முற்றிலும் முதிர்ச்சியடையட்டும் என்று காத்திருக்கச் சொல்ல மாட்டோம். கண்புரை பாதிப்பைக் கண்டறிந்ததுமே அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைப்போம்.
நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கண்புரை பாதிப்பு அதிகமாகவும், சராசரி வயதைவிட சீக்கிரமாகவும் பாதிக்கலாம். இன்றைய நவீன மருத்துவத்தில் லேசர் மூலம் கண்புரை நீக்கப்பட்டு, பார்வையை முழுமையாகத் திரும்பப் பெறவைக்க முடியும்.
எனவே எமர்ஜென்சியாக நினைத்து சிகிச்சை எடுக்க வேண்டிய பிரச்னை இல்லை இது என்றாலும், அது சம்பந்தப்பட்ட நபரின் பார்வையைப் பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டும். அந்த நபர், பார்வை மிகவும் மங்கலானது போல உணர்ந்தால், உடனடியாக கண் மருத்துவரை அணுகி, அறுவை சிகிச்சை மேற்கொண்டு, உடனே வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.